சனி, 26 அக்டோபர், 2013

ஆரோக்கியம்

இலங்கை சுகாதார அமைச்சின் போசாக்கு ஒருங்கிணைப்புபிரிவு யுனிசெவ் அனுசரணையுடன் வெளியிடப்பட்டபதாகையில் உள்ள வாசகங்கள் இவை தான் : 

• காலை உணவாக வீட்டில் தயாரிக்கும் உணவினைஉட்கொள்வேன்.
 
 பிரதான உணவு வேளைகள் மூன்றினையும் ஒரு போதும்தவிர்த்துக் கொள்ள மாட்டேன் (காலை உணவுமதிய உணவு,இரவு உணவு).
 
• இரண்டு பிரதான உணவு வேளைகளுக்கு இடையில் வீட்டில்தயாரிக்கும் சிற்றுண்டி உணவுகளை உட்கொள்வேன்.
 
• அரிசிஅரிசி மாகுரக்கன்பலாக்காய்ஈரப்பலாக்காய்,மரவள்ளிக் கிழங்குஉருளைக்கிழங்குவற்றாளைக் கிழங்குஆகியவற்றின் மூலம் தயாரிக்கப்படும், உணவுகளை மட்டும்பிரதானமாக, எனது உணவுத்தட்டில் பெருமளவு சேர்த்துக்கொள்வேன்

• புரதம்அதிகம் நிறைந்த மீன் முட்டைநெத்தலி கருவாடுமற்றும் தானிய வகைகளான கௌபிகடலைபருப்புபயறுபோன்றவற்றின் மூலம் தயாரிக்கப்படும் உணவுகளை தினமும்விரும்பி உட்கொள்வேன்.
 
• அதிக இரும்புச் சத்து கொண்ட மீன்இறைச்சிகருவாடுமற்றும் பச்சை இலைக் கீரை வகைகள்வல்லாரை,முளைக்கீரைகங்குன்முள்ளங்கிபசளி போன்றவற்றின்மூலம் தயாரிக்கப்படும் உணவுகளை நான் தினமும் உணவில்சேரத்துக் கொள்வேன்.
 
• விட்டமின்கள் மற்றும் கனியுப்புக்கள் அதிகமுள்ள பல்வேறுநிறமுடைய மரக்கறி வகைகள் பழவகைகளைஉட்கொள்வேன்.
 
• நான் அழகாககவர்ச்சியாக இருப்பதற்காக தினமும் ஒருமணித்தியாலம் விளையாடுவேன்.
 
• தொலைக்காட்சி பார்ப்பதுதொலைக்காட்சி குறும்திரைவிளையாட்டுக்களில் ஈடுபடுதல்கணினிகளைப்பயன்படுத்துவது போன்ற உடற்பயிற்சி அற்ற உடலுக்குஊக்கமளிக்காத செயற்பாடுகளைக் குறைத்துக் கொள்வேன்

• பல வியாதிகளை ஏற்படுத்தும் கோதுமைமாஎண்ணெய்,உப்பு கொண்டு தயாரிக்கப்படும் உணவுகள்செயற்கைப்பானங்கள் போன்றவற்றை உட்கொள்வதைத் தவிர்த்துக்கொள்வேன்.
 
• உணவு உட்கொள்வதற்கு ஒரு மணித்தியாலத்திற்குமுன்போ அல்லதுஉணவு உட்கொண்டு ஒருமணித்தியாலத்திற்குள்ளோ தேநீர்கோப்பி அருந்துவதைத்தவிர்த்துக் கொள்வேன்.

• தினமும் நன்றாக கொதிக்க வைத்துஆறிய நீரைஅருந்துவேன்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

வாங்கோ, வாங்கோ, பின்னூட்டம் போடுங்கோ