வியாழன், 30 நவம்பர், 2017

Important Lesson

யாரை நீங்கள் நியமிக்க முடியாது?


யாரை நீங்கள் நியமிக்க முடியாது?

மனவளக் கட்டுரை

பணம் பணம் பணம் என்று அதை நோக்கியே நேர் வ்ழியிலும் சரி, குறுக்கு வ்ழியிலும் சரி செயல்படும் நண்பர்களுக்கு..

உலகமே வியந்த, பொறாமைப்பட்ட, உச்சமான நிலையைத் தொட்ட ஆப்பிள் நிறுவ்னத்தின் அதிபர் ஸ்டீவ் ஜாப்ஸ் உடல்நலம் குன்றி
56 வ்யதில் உலகைப் பிரிவதற்கு முன்பாக விட்டுச் சென்ற செய்தியை அவரின் ஆங்கிலத்திலிருந்து தமிழ்ப் படுத்திச் சொல்கிறேன்..

"வர்த்தக உலகில் வெற்றியின் உச்சம் தொட்டேன். மற்றவர் பார்வையில் என் வாழ்க்கை வெற்றிக்கு உதாரணமாகக் காட்டப்பட்டது. நோயுற்று படுக்கையில் இருக்கும் இப்போது
என் முழு வாழ்க்கையையும் நினைத்துப் பார்க்கிறேன். பெற்ற புகழும், செல்வமும் அதனால் அடைந்த பெருமையும் இப்போது எனக்கு அர்த்தமற்றதாகத் தோன்றுகிறது.

உங்கள் காரை ஓட்ட யாரையாவது நியமிக்கலாம்.
உங்களுக்காக சம்பாரிக்க எத்தனைப் பேரை வேண்டுமானாலும் நியமிக்கலாம்.
ஆனால் உங்கள் நோயையும் அதனால் சந்திக்கும் 
வலிகளையும் ஏற்றுக் கொள்ள யாரையும் நியமிக்க முடியாது.

எந்தப் பொருள் தொலைந்தாலும் மீண்டும் தேடிவிட முடியும். ஆனால் வாழ்க்கை தொலைந்துவிட்டால்? திரும்ப கிடைக்கவே கிடைக்காது.

வாழ்க்கை எனும் நாடக மேடையில் இப்போது நீங்கள் எந்த காட்சியில் நடித்துக்கொண்டிருந்தாலும் நாடகம் முழுமையாக முடியும் என்று சொல்ல முடியாது. நடுவிலேயே எப்போது வேண்டுமானாலும் திரை விழலாம்.

நாம் பக்குவமடையும்போதுதான் சில விஷயங்கள் புரியும்.

முப்பது ரூபாய் கெடிகாரமும் சரி, மூன்று லட்சம் ரூபாய் கெடிகாரமும் சரி.. ஒரே நேரம்தான் காட்டும்.

செலவழிக்க வாய்ப்பு இல்லாதபோது உங்கள் மணிபர்சில் நூறு ரூபாய் இருந்தாலும் ஒன்றுதான். ஒரு கோடி இருந்தாலும் ஒன்றுதான்.

நீங்கள் தனிமையான பிறகு 300 சதுர அடி வீட்டில் வசிப்பதும்
30,000 சதுர அடி பங்களாவில் வசிப்பதும் ஒன்றுதான்.

ஆகவே..உங்களைச் சுற்றிலும் இருக்கும் உறவினர்கள், நண்பர்கள், நெருக்கமான குடும்பத்தினர் அனவரிடமும் அன்புடன் பேசிப் பழகுங்கள். அதுதான் உண்மையான மகிழ்ச்சி. அது நீங்கள் வாங்கிய அல்லது வாங்க விரும்பும் எந்தப் பொருளிலும் இல்லை.

பின் குறிப்பு:
ஸ்டீவ் ஜாப்ஸ் மறைந்த போது அவர் விட்டுச் சென்ற சொத்துக்களின் மதிப்பு 2011ல் 10.2 பில்லியன் டாலர்ஸ்!
( இந்திய மதிப்பில் அறுபத்து ஐந்தாயிரம் கோடிக்கு மேல்)

நன்றி - திரு. Subbiah Veerappan