இன்றைய நிலையில் தமிழில் மிக அதிகமான வலைப்பதிவர்கள் இருக்கிறார்கள். அனைவரும் நிறைய எழுதுகிறார்கள். அவர்களில் பலரது வலைப்பூவுக்குள் நுழைந்தால் ஏண்டா நுழைந்தோம் என்ற அளவுக்கு அதிகமாக இடைஞ்சல்கள் இருக்கும். சில பதிவையே படிக்க முடியாத அளவுக்கு இடைஞ்சல் தரும். அவை என்ன? ஒரு பதிவர் எவற்றை எல்லாம் தவிர்க்க வேண்டும்?
உங்கள் வலைப்பூவில் நீங்கள் வைத்து இருக்கும் ஒவ்வொரு Widget-ம் உங்கள் வலைப்பூ load ஆகும் நேரத்தை தீர்மானிக்கும். சிலர் தெரிந்து வைத்து இருந்தாலும் நிறைய பேர் இது எப்படி என்பதே தெரியாமல் தான் வைத்து இருக்கிறார்கள்.
அப்படி என்ன Widget-கள் ?
விருதுகள்:
ஒரு சில வலைப்பூவுக்குள் நுழைந்தால் வரிசையாக இவர் கொடுத்தார், அவர் கொடுத்தார் என ஏகப்பட்ட விருது Widget-கள் இருக்கும். அத்தனையும் இமேஜ்கள் தான். இவை உங்கள் வலைப்பூ லோட் ஆகும் வேகத்தை குறைக்கும்.
இதற்கு நீங்கள் விருது என்ற பெயரில் ஒரு பேஜ் (Page) உருவாக்கி அதில் அவற்றை சேர்க்கலாம்.அந்த இணைப்பை மட்டும் முகப்பில் தரலாம். இதனால் தேவை இல்லாத widget-கள் குறையும்.
Traffic, Rank, Hits:
அடுத்து இம்சை தரும் சில இந்த மூன்று பெயரும் கொண்டவை . இவற்றில் உள்ள Coding உங்கள் வலைப்பூ Load ஆகும் நேரத்தில் தங்கள் பங்குக்கு என்று கொஞ்சம் எடுத்துக் கொள்கின்றன. இதை கொல்கின்றன என்றும் சொல்லலாம்.
Traffic Widget என்பதை பெரும்பாலோனோர் பயன்படுத்த அவசியம் இல்லை, என்றாலும் நிறைய வலைப்பூக்களில் இருக்கிறது. .Rank Gadget வலைப்பூக்களுக்கு தேவையே இல்லை. (அலெக்ஸா ரேங்க்கை தவிர்த்து மற்ற அனைத்தும் வீண்), Hits என்பவை Blogger வழங்கும் Stats என்பதே காட்டும், இதில் தேவை இல்லாமல் மற்ற தளங்களில் இருந்து பயன்படுத்த வேண்டாம்.
2. பதிவின் நீளம்:
சிலரது பதிவுகளை படிக்கும் போது பாதியில் தூக்கம் வரும் அளவுக்கு மிகப் பெரிய பதிவாக எழுதி இருப்பார்கள். மிகப் பெரிய பதிவு என்று கருதினால் அவற்றை 1, 2 (3,....) என்று எழுதுங்கள் தவறில்லை, ஒரேடியாக எழுதி படிப்பவரின் பொறுமையை சோதிக்க வேண்டாம்.
3. பதிவின் உள்ளே படங்கள்:
நீங்கள் ஒரு பதிவில் ஒரு படத்தை சேர்க்கும் முன் அதன் காரணத்தை உங்களுக்கு நீங்களே கேட்டு பாருங்கள். சில வலைப்பூக்களில் படத்தை பார்ப்பதா? பதிவை படிப்பதா என்னும் அளவுக்கு படங்கள் இருக்கும். நீங்கள் இவ்வாறு சேர்க்கும் படத்தை Slow Internet Speed உள்ள ஒருவர் பார்க்க நேர்ந்தால், அவரால் உங்கள் வலைப்பூவை முழுமையாக படிக்க இயலாது என்பதை நினைவில் கொள்க.
4. Title Banner:
பதிவிற்கு இடைஞ்சல் செய்யும் வண்ணம் மிகப் பெரிய டைட்டில் பேனர் வைப்பது உங்கள் வாசகரை உங்கள் வலைப்பூ விட்டு விரைவாக வெளியேற வைக்கும். அழகாக உங்கள் தலைப்புக்கு ஏற்ற சிறிய படம் அல்லது பெயர் மட்டும் போதுமே?
5. புதிய விண்டோவில் ஓபன் ஆகும் பக்கங்கள்:
பல வலைப்பதிவர்கள் தனது வாசகர் தன் வலைப்பூவை விட்டு செல்லக் கூடாது என்ற எண்ணத்தில் ஒரு லிங்க் ஒன்றை கிளிக் செய்தால் அது புதிய Tab/Window-வில் ஓபன் ஆகும்படி செய்து இருப்பார்கள். சில நேரம் அவர்கள் வலைப்பூ இணைப்பை கிளிக் செய்தாலே இது மாதிரி வரும். இது மிகப் பெரிய மைனஸ் பாயிண்ட். பதிவிற்குள் ஒரு இணைப்பை கொடுக்கும் போது அதை எப்படி கொடுக்க வேண்டும் என்ற வசதி உள்ளது. (Open this link in a new window என்னும் வசதி). இதுவே Side-bar என்றால் பிரச்சினை தான்.
இதை முன்பு ஒரு பதிவில் External Link மட்டும் New Tab இல் ஓபன் ஆக என்ன செய்வது என்று சொல்லி இருந்தேன்.
6.Horizontal scroll bar:
இது ஒரு மிகப் பெரிய எரிச்சல். உங்கள் வலைப்பூ Width என்ன என்பதை நீங்கள் சரியாக தீர்மானிக்க வேண்டும். அதிக பட்சம் 1000 Px -ஐ தாண்ட வேண்டாம். இதை விட அதிகமாக வைக்கும் போது சிறிய சைஸ் மானிட்டர்களில் படிக்கும் போது Horizontal ஆக scroll செய்ய வேண்டி வரும்.
7. Blogger Template, நிறம்:
உங்கள் வலைப்பூவுக்கு டெம்ப்ளேட் தெரிவு செய்யும் போது அது உங்களுக்கு பிடித்து உள்ளது என்று தெரிவு செய்யாதீர்கள், உங்கள் வாசகர்களுக்கு பிடிக்குமா என்று தெரிவு செய்யும். அழகாக நிறைய படங்கள், Widget கள் இருக்கும் Blogger Template களை வாசகர்கள் பார்க்க விரும்பினாலும், அவை உங்கள் பதிவை படிப்பதன் கவனத்தை மாற்றி விடும். அத்தோடு வாசகரை Disturb செய்யும். அது போன்றவற்றை தவிர்க்கவும்.
உங்கள் வலைப்பூவுக்கு டெம்ப்ளேட் தெரிவு செய்யும் போது அது உங்களுக்கு பிடித்து உள்ளது என்று தெரிவு செய்யாதீர்கள், உங்கள் வாசகர்களுக்கு பிடிக்குமா என்று தெரிவு செய்யும். அழகாக நிறைய படங்கள், Widget கள் இருக்கும் Blogger Template களை வாசகர்கள் பார்க்க விரும்பினாலும், அவை உங்கள் பதிவை படிப்பதன் கவனத்தை மாற்றி விடும். அத்தோடு வாசகரை Disturb செய்யும். அது போன்றவற்றை தவிர்க்கவும்.
அது போல உங்கள் வலைப்பூ என்ன வண்ணத்தில் இருக்க வேண்டும் என்பது உங்கள் விருப்பம். ஆனால் அது வாசகருக்கு எரிச்சல் தராமல் இருக்க வேண்டியதும் உங்கள் கடமையே. சிலரது வலைப்பூவை பார்த்தால் லிங்க் ஒரு நிறம், பதிவின் உள்ளே ஒரு நிறம், சைட் பார் ஒரு நிறம் என்று இருக்கிற அனைத்து வண்ணங்களையும் பயன்படுத்தி இருப்பார்கள். இதை தவிருங்கள். முக்கியமாக் உங்கள் பதிவுகள் வெள்ளை நிறப் பிண்ணனியில், கருப்பு நிற எழுத்துருக்களை கொண்டிருப்பதே சிறந்தது என்பதை நினைவில் கொள்க.
8. பிண்ணனியில் பாடல்கள்:
நிறைய நண்பர்கள் இதை தவிர்க்க வேண்டும். உங்கள் வாசகர்கள் உங்கள் வலைப்பூவுக்கு எதற்கு வருகிறார்கள்? பதிவை படிக்கத் தானே? அவரை இடைஞ்சல் செய்யும் வண்ணம் நீங்கள் வைத்திருக்கும் பாடல்கள் அமையும். சில சமயங்களில் அந்த Widget எங்கே உள்ளது என்று கண்டுபிடிக்க விருப்பம் இன்றி உங்கள் வலைப்பூ விட்டே சென்று விடுவார்கள்.
9. Slide Show:
உங்கள் பதிவுக்கு மேலே அமையும் இது, உங்கள் வாசகரை எரிச்சல் அடைய செய்யும். அதிலும் தேவையே இல்லாமல் 5 முதல் 7 படங்கள் வேறு இருக்கும். வழக்கம் போல பக்கம் ஸ்லோ லோடிங்க் தான்.
10. Pop-Up விண்டோ:
உங்கள் பதிவை படிப்பவருக்கு உச்சகட்ட எரிச்சலை தருவது இது தான். ஒரே கிளிக், ஒன்பது Window என்று பிளான் பண்ணி/பண்ணாமல் நீங்கள் வைக்கும் இந்த பிரச்சினை தரும் Widget-களை நீக்கி விடுங்கள். இது போன்றவற்றை நீங்கள் ப்ளாக்கர் மூலம் பயன்படுத்தவே கூடாது. இதனால் உங்கள் வலைப்பூ நீக்கப்படும் வாய்ப்பு உள்ளது.
இந்த பத்தும் பெரும்பாலோனோர் செய்யும் தவறுகள். நீங்களும் இந்தப் பத்தில் ஏதேனும் ஒன்றை உங்கள் வலைப்பூவில் வைத்து இருந்தால் அவற்றை நீக்க முயற்சி செய்யவும்.
Read more: http://www.karpom.com/2012/04/10-biggest-mistakes-of-blogger.html#ixzz22q8V2CuD