புதன், 13 ஜனவரி, 2016

யானைகளை விரட்ட




விவசாயிகள் கவனத்திற்கு...
ஆப்பிரிக்க விவசாயிகள் எல்லோரும் விலங்கியலாளர் டாக்டர் லூசி கிங்குக்கு நன்றி சொல்லிக்கொண்டிருக்கிறார்கள். ஆப்பிரிக்க யானைகள் கிராமங்களுக்குள் புகுந்து, பயிர்களை நாசம் செய்வது அங்கே வழக்கமான விஷயமாக இருந்து வந்தது. அவர்களின் பிரச்சினையைத் தீர்க்க யானைகளும் தேனீக்களும்என்ற பிராஜக்டை உருவாக்கினார் லூசி. யானைகளுக்கு வேல மரங்கள் என்றால் பிடிக்காது, காரணம் அந்த மரங்களில் தேனீக்கள் கூடு கட்டியிருப்பதுதான். பல ஆண்டுகள் யானைகளை ஆராய்ச்சி செய்த பிறகு, தேனீக்களுக்கு யானைகள் பயப்படுவதைக் கண்டுபிடித்தார் லூசி.
விவசாய நிலங்களைச் சுற்றிலும், 30 மீட்டர் இடைவெளியில் தேனீ வளர்ப்பு தொட்டிகளை வைத்தார். விளைந்திருக்கும் பயிர்களின் வாசத்தை வைத்தே யானை அந்த இடம் நோக்கி வரும். அப்படி வரும் யானைகள் தேனீக்களின் ரீங்காரம் கேட்டவுடன் பின்வாங்கும். எல்லா கூடுகளும் ஒரே கம்பியால் இணைக்கப்பட்டிருக்கிறது. ஒருவேளை தேன் கூட்டை யானை தொட்டுவிட்டால், கம்பி அதிர்வதன் மூலம் கூடுகளில் உள்ள தேனீக்கள் யானைகளைக் கொடுக்கால் தாக்க ஆரம்பித்துவிடும்.
யானை அலறியடித்துகொண்டு ஓடிவிடும். பிறகு இந்தப் பக்கமே வராது. ’’தேனீக்களை விளைநிலங்களில் வளர்ப்பதன் மூலம் விவசாயிகளுக்குக் கூடுதல் வருமானம் வருகிறது. யானைகளிடமிருந்து பயிர்களும் பத்திரமாகப் பாதுகாக்கப்படுகின்றன. யானைகள் மிகச் சிறந்த உயிரினங்கள். அவற்றின் எண்ணிக்கை குறைந்து வரும் நிலையில், மின்சாரக் கம்பிகளைப் பயன்படுத்தினால் அது யானைகளுக்கும் மனிதர்களுக்கும் ஆபத்தாகிவிடுகின்றன. தேன் கூடுகளால் வேலி அமைத்து விட்டால் மனிதர்கள், யானைகளுக்கு மட்டுமில்லை, இயற்கைக்கும் நல்லது’’ என்கிறார் லூசி கிங்.
‘’யானை ஒருநாளைக்கு 400 கிலோ உணவு சாப்பிடும். எங்க நிலத்துக்குள் நுழைந்தால் ஒன்றும் மிச்சம் இருக்காது. இதுவரை யானைகளைப் பார்த்தால் தகர டப்பாவால் தட்டுவோம், நெருப்புப் பந்தம் பிடிப்போம். இப்போது எங்களுக்கும் பிரச்சினை இல்லை, யானைகளுக்கும் பிரச்சினை இல்லை. வருமானமும் கூடியிருக்கிறது’’ என்று மகிழ்கிறார் ஒரு விவசாயி. இயற்கை, மனிதர்கள், யானைகள் என்று எல்லா வழியிலும் பிரமாதமான திட்டத்தை வகுத்து கொடுத்த லூசி கிங்குக்கு சர்வதேச விருதுகள் குவிகின்றன.
நம் ஊர் விவசாயிகளும் இந்தத் திட்டத்தைப் பின்பற்றணும்
@
உமா ராமச்சந்திரன்


9 கருத்துகள்:

  1. ஐயா

    தேனிக்கள் பெருக வேண்டுமாயின் தேன் எடுக்க மலர்கள் வேண்டுமே. தானிய பயிர்களில் தேன் எடுக்க முடியாதே. மலர்களுக்காக விவசாயிகள் வேறு என்ன பயிர் செய்தார்கள்.

    --
    Jayakumar

    பதிலளிநீக்கு
  2. அய்யா அவர்களுக்கும் அவர் குடும்பத்தினருக்கும் மற்றும் அய்யாவின் அன்பு நண்பர்களுக்கும் இனிய பொங்கல் வாழ்த்துக்கள்!!!

    பதிலளிநீக்கு
  3. அன்பினும் இனிய அய்யா
    தங்களுக்கும், தங்களது குடும்பத்தினர் அனைவருக்கும்
    இணையில்லாத இன்பத் திருநாளாம்
    "தைப் பொங்கல் திருநாள் நல்வாழ்த்துகள்
    நட்புடன்,
    புதுவை வேலு

    பதிலளிநீக்கு
  4. வணக்கம்
    ஐயா

    அறியாத தகவலை பகிர்ந்துள்ளீர்கள் அறிந்தேன்
    தங்களுக்கும் தங்கள் குடும்பத்தாருக்கும் இனிய பொங்கல் நல்வாழ்த்துகள்.
    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    பதிலளிநீக்கு
  5. சமீபத்தில் இந்த செய்தியை தினமலர் செய்தித்தாளில் படித்து மகிழ்ந்தேன். இங்கும் படிக்க நேர்ந்ததில் மிக்க மகிழ்ச்சி.

    இதுபோல ஒரு வலைத்தளம் தங்களுக்கு இருப்பதே இன்று அகஸ்மாத்தாக மட்டுமே நான் அறிந்தேன். இது ஏனோ என் டேஷ் போர்டில் தெரியவில்லை. Follower ஆக Provision ஏதும் கொடுக்காததால் இருக்கலாம் என நினைக்கிறேன்.

    பகிர்வுக்கு நன்றிகள்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. எனக்கு முக்கியமாகத் தெரியும் இணையப் பக்கங்களைச் சேமித்து வைப்பதற்காக இந்த தளத்தை வைத்திருக்கிறேன். இது போல் இன்னொரு தளமும் இருக்கிறது. முடிந்தால் பார்க்கவும்.

      http://drpkandaswamyphd.blogspot.in/2015/11/7-ways-to-change-your-attitude.html

      இந்த இரண்டு தளங்களையும் பெரிதாக விளம்பரப்படுத்தவில்லை.

      நீக்கு
    2. வணக்கம், சார். சோதனைக்களம் கண்டேன்.
      மிக்க மகிழ்ச்சி கொண்டேன்.
      7 Ways to Change Your Attitude
      என்றொரு ஆங்கிலப் பதிவு மேலாக உள்ளது.
      தகவலுக்கு நன்றிகள்.
      அன்புடன் VGK

      நீக்கு

வாங்கோ, வாங்கோ, பின்னூட்டம் போடுங்கோ