வெள்ளி, 12 செப்டம்பர், 2014

பச்சை மிளகாய் ஊறுகாய்


எனக்கு ஊறுகாய்கள் போடுவதில் விருப்பம் அதிகம். அதை விஞ்ஞான பூர்வமாகப் போடுவேன். நான் ஒரு விஞ்ஞானி என்று இதிலிருந்து உங்களுக்குப் புரிந்திருக்கும்.

சில நாட்களுக்கு முன் கடைக்குப் போயிருந்தபோது ஊறுகாய் செக்ஷனில் இஞ்சி படம் போட்டு ஒரு பாக்கெட் இருந்தது. இஞ்சி ஊறுகாய் ஜீரணத்திற்கு நல்லதுதானே என்று வாங்கி வந்தேன். அதைப் பிரித்து பாட்டிலில் போட்ட பிறகுதான் தெரிந்தது. அது இஞ்சி ஊறுகாய் அல்ல, இஞ்சி பேஸ்ட் என்று. அதை என்ன செய்யலாம் என்று யோசித்தபோது, முன்னொரு நாள் கடையில் பச்சை மிளகாய் ஊறுகாய் வாங்கி வந்து சாப்பிட்டது ஞாபகம் வந்தது.

ஆகவே இப்போது இந்த இஞ்சி பேஸ்டையும் பச்சை மிளகாயையும் சேர்த்து ஊறுகாய் போடலாமே என்ற எண்ணம் வந்தது. அந்த எண்ணத்தை உடனடியாகச் செயல்படுத்தினேன்.

பச்சைமிளகாய் 20 ஐ மிக்சியில் அரைத்தேன். கூடவே இஞ்சி பேஸ்ட்டையும் சேர்த்து இன்னொரு ரவுண்ட் மிக்சியை ஓட்டினேன். இப்போது நைசாக ஒரு பேஸ்ட் கிடைத்தது. அத்ற்கு கொஞ்சம் வினிகர் ஊற்றினேன். அளவாக உப்பு போட்டு, கொஞ்சம் சிட்ரிக் ஏசிட் பவுடர் சேர்த்தேன். இரண்டு நாள் கழித்து சிறிது நல்லெண்ணை காய்ச்சி கடுகு, பெருங்காயம் போட்டு தாளித்து, இந்தக் கலவையில் கொட்டினேன்.

ஆஹா, என்ன ருசி, என்ன காரம், என்ன மணம் ? ஒரு துளி தொட்டு நாக்கில் வைத்தால் ஒரு கவளம் தயிர் சாதம் அப்படியே வயிற்றுக்குள் போகிறது.  தேவாம்ருதம் தோற்றது போங்கள். ஆனால் இதை அனுபவிக்க பூர்வ ஜன்ம புண்ணியம் வேண்டும்.

3 கருத்துகள்:

  1. புதிய சிந்தனையில்.. புதிய ஊறுகாய்! நாங்கள் இந்த இஞ்சி பேஸ்ட், பூண்டு பேஸ்ட் எல்லாம் வாங்குவதே இல்லை. (நீங்களும் அதை விரும்பி வாங்கவில்லை என்று தெரிகிறது!)

    பதிலளிநீக்கு
  2. . தேவாம்ருதம் தோற்றது போங்கள். ஆனால் இதை அனுபவிக்க பூர்வ ஜன்ம புண்ணியம் வேண்டும் //

    காப்புரிமைவாங்கிவிடுங்கள் ஐயா..புதிய அருமையான கண்டுபிடிப்பு..!

    பதிலளிநீக்கு
  3. ஐயா!
    தங்கள் செய்முறை சட்னிபோல் உள்ளதே! ஊறுகாயெனில் அவை காய்கள் முழுதாக இருக்குமே.
    உங்கள் செய்முறையில் பச்சைமிளகாய்க் காரம் எனக்கு ஒத்துவருமோ எனப் யோசிக்கிறேன்.
    எனினும் தோசைக்கு முயற்சிக்கலாம் போல் உள்ளது.
    ஆனாலும் சமையலிலும் கண்டுபிடிப்பிலும் ஓயாது ஈடுபடுவீர்களோ?

    பதிலளிநீக்கு

வாங்கோ, வாங்கோ, பின்னூட்டம் போடுங்கோ