செவ்வாய், 16 செப்டம்பர், 2014
திங்கள், 15 செப்டம்பர், 2014
Your eyes may cheat you
Thanks to BabaMailThe Flower People |
If you're like us, then at first glance, these may look like photos of flowers to you, but in actuality, this is an artistic display of skill by body artists and dancers alike, together creating beautiful 'human flowers' that make use of many colors, shapes and designs. These forms are a beautiful expression of imagination and ability, to make something our eye is not accustomed to see. No doubt that as an art, these photos create something new and fascinating. |
வெள்ளி, 12 செப்டம்பர், 2014
பச்சை மிளகாய் ஊறுகாய்
எனக்கு ஊறுகாய்கள் போடுவதில் விருப்பம் அதிகம். அதை விஞ்ஞான பூர்வமாகப் போடுவேன். நான் ஒரு விஞ்ஞானி என்று இதிலிருந்து உங்களுக்குப் புரிந்திருக்கும்.
சில நாட்களுக்கு முன் கடைக்குப் போயிருந்தபோது ஊறுகாய் செக்ஷனில் இஞ்சி படம் போட்டு ஒரு பாக்கெட் இருந்தது. இஞ்சி ஊறுகாய் ஜீரணத்திற்கு நல்லதுதானே என்று வாங்கி வந்தேன். அதைப் பிரித்து பாட்டிலில் போட்ட பிறகுதான் தெரிந்தது. அது இஞ்சி ஊறுகாய் அல்ல, இஞ்சி பேஸ்ட் என்று. அதை என்ன செய்யலாம் என்று யோசித்தபோது, முன்னொரு நாள் கடையில் பச்சை மிளகாய் ஊறுகாய் வாங்கி வந்து சாப்பிட்டது ஞாபகம் வந்தது.
ஆகவே இப்போது இந்த இஞ்சி பேஸ்டையும் பச்சை மிளகாயையும் சேர்த்து ஊறுகாய் போடலாமே என்ற எண்ணம் வந்தது. அந்த எண்ணத்தை உடனடியாகச் செயல்படுத்தினேன்.
பச்சைமிளகாய் 20 ஐ மிக்சியில் அரைத்தேன். கூடவே இஞ்சி பேஸ்ட்டையும் சேர்த்து இன்னொரு ரவுண்ட் மிக்சியை ஓட்டினேன். இப்போது நைசாக ஒரு பேஸ்ட் கிடைத்தது. அத்ற்கு கொஞ்சம் வினிகர் ஊற்றினேன். அளவாக உப்பு போட்டு, கொஞ்சம் சிட்ரிக் ஏசிட் பவுடர் சேர்த்தேன். இரண்டு நாள் கழித்து சிறிது நல்லெண்ணை காய்ச்சி கடுகு, பெருங்காயம் போட்டு தாளித்து, இந்தக் கலவையில் கொட்டினேன்.
ஆஹா, என்ன ருசி, என்ன காரம், என்ன மணம் ? ஒரு துளி தொட்டு நாக்கில் வைத்தால் ஒரு கவளம் தயிர் சாதம் அப்படியே வயிற்றுக்குள் போகிறது. தேவாம்ருதம் தோற்றது போங்கள். ஆனால் இதை அனுபவிக்க பூர்வ ஜன்ம புண்ணியம் வேண்டும்.
புதன், 10 செப்டம்பர், 2014
தங்க விழா விருது
இந்தப் பதிவு யாருடைய மனதையும் நோகச்செய்வதற்காக இல்லை என்று அன்புடன் தெரிவித்துக்கொள்கிறேன்.
நேற்றுடன் எனக்கு கல்யாணம் ஆகி 50 வருடங்கள் பூர்த்தியாகி விட்டது. இந்த தங்கமான தருணத்தில் சக பதிவர்களுக்கு ஒரு அன்பளிப்பு வழங்கலாம் என்று நினைத்தேன். அதன் விளைவுதான் கீழே கொடுக்கப்பட்டிருக்கும் விருது.
இந்த விருதை அனைத்துப் பதிவர்களுக்கும் கொடுப்பதில் பெருமிதம் கொள்கிறேன். பிரியப்பட்டவர்கள் கீழ்க்கண்ட நிபந்தனைகளுக்கு உட்பட்டு தங்கள் பிளாக்குகளில் இந்த விருதைப் பிரசுரித்துக்கொள்ளலாம்.
1. இந்த விருதைக் கொடுத்தவர் யார் என்று எங்கும் குறிப்பிடக்கூடாது.
2. இந்த விருதுக்காக நன்றி சொல்லக்கூடாது.
3. இதை நீங்கள் யாருக்கும் வழங்கக் கூடாது.
அவ்வளவுதான்.

இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)