இன்று (13-3-2015) எனது தளத்தின் (மன அலைகள்) தமிழ்மணம் தரவரிசையில் 13 வது எண்ணில் உள்ளது. கடந்த பத்து நாட்களாகவே இவ்வாறுதான் உள்ளது.

இதை மேம்படுத்த நானும் பல நாட்களாகவே முயற்சி செய்ததில், என்னால் இவ்வளவுதான் அடைய முடிந்தது. இதற்காக நான் செலவிட்ட நேரமும் முயற்சியும் அதிகம். ஆனாலும் இந்த ரேங்கிற்கு மேல் அடைய முடியவில்லை.
ஏன் இந்த நிலை என்று யோசித்ததில் கீழ்க்கண்ட காரணங்கள் மனதில் புலப்பட்டன.
1. நான் யாரையும் என் பதிவைப் பார்க்க வாருங்கள் என்று கூப்பிடுவதில்லை.
2. அதிகமான பதிவுகளுக்குச் சென்று பின்னூட்டம் போடுவதில்லை.
3. எனக்கென்று ஒரு குழு ஏற்படுத்திக்கொள்ளவில்லை.
4. தவிர, என்னுடைய பதிவுகளின் தரம் அவ்வளவுதான் பெறும் என்று நினைக்கிறேன்.
நிலை இவ்வாறிருக்க எனக்கு இனியும் தமிழ்மணம் முதல் ரேங்க் என்னும் கானல் நீரைத் தேடி ஓடும் சக்தி இல்லை. அது தேவையும் இல்லை. ஆகவே இனிமேல் எனக்குத் தோன்றும்போதுதான் பதிவுகள் எழுதுவேன். என் தளத்தின் தமிழ்மணம் ரேங்க் எக்கேடோ கெட்டுப் போகட்டும். அதைப்பற்றிய எண்ணத்தை இன்றோடு விட்டு விட்டேன்.

சில நாட்களுக்கு முன்னர்வரை பத்து அல்லது பதினோராவது இடத்தில் (தமிழ்மண ரேங்கிங்) இருந்த நாங்கள் கொஞ்ச நாள் முன்பு 26 ஆம் இடத்துக்குப் போயிட்டோம். பிறகு மெல்ல, மெல்ல 22 க்கு இறங்கி வந்தது. இப்போது 22க்கும் 24 க்கும் ஊசலாடுகிறது! பாலும் பழமும் படத்தில் டி எம் எஸ் பாடும் பாடலைப் பாடிக் கொண்டு சென்று விடுகிறோம் நாங்கள்!!
பதிலளிநீக்கு:))))))))))))))
சீ சீ இந்தப் பழம் புளிக்கும். சுடாத பழம் நீ (பழனி)ஐயா.
பதிலளிநீக்கு--
Jayakumar
Yaadhenin yaadhenin neengiyaan nothal
பதிலளிநீக்குAthanin athanin ilan.
Subbu thatha