நமது சிறுவயது முதல் நம் ஆசிரியர்களும், பெற்றோர்களும் நமக்கு நல்ல பழக்கவழக்கங்களை சொல்லி கொடுக்கிறார்கள்.இதையெல்லாம் கேட்கும் போது அந்த வயதில் நமக்கு வேப்பங்காயைப் போல் கசந்திருக்கும். ஆனால் ஒரு பக்குவம் வந்த பின் தான் அதன் நன்மைகள் நமக்கு புரியும்.
ஆனால் இன்னும் சிலருக்கோ, அது புரிவதே இல்லை. அப்படியே சில பழக்கவழக்கங்கள் இருந்தாலும் கூட, பல விடயங்கள் அவர்களுக்கு தெரிவதில்லை.
ஆனால் இன்னும் சிலருக்கோ, அது புரிவதே இல்லை. அப்படியே சில பழக்கவழக்கங்கள் இருந்தாலும் கூட, பல விடயங்கள் அவர்களுக்கு தெரிவதில்லை.
நல்ல ஆரோக்கியமான உடலை பெறுவதற்கு நாளாகும் என்று நீங்கள் நினைத்தால் 60 நொடிகளுக்குள் செய்யக்கூடிய சில ஆரோக்கியமான பழக்கவழக்கங்களை பின்பற்றுங்கள்.
உங்கள் இருக்கை பெல்டை அணிவதிலிருந்து, கைகளை கழுவும் வரையில் ஆரோக்கியத்தை பெற நாம் நினைப்பதை விட குறைந்த நேரமே ஆகும். ஆனால் இதில் நம்முடைய நேர்மறை மற்றும் எதிர்மறை தேர்வுகள் தான் முக்கியமான ஒன்று.
சரி, அப்படி உங்கள் உடல் நலத்திற்கு நன்மைகளை ஏற்படுத்தக்கூடிய சில நல்ல பழக்கவழக்கங்களை பற்றி தெரிந்து கொள்ளுங்கள்.
* ஷூ மற்றும் செருப்புகளை வாசலிலேயே கழற்றிவிட்டால், அழுக்கு, தூசி, கற்கள், இரசாயனங்கள் மற்றும் அலர்ஜியை ஏற்படுத்தக்கூடிய பொருட்கள் என அனைத்தையும் வீட்டிற்குள் வர விடாமல் தடுக்கலாம்.
இது பழங்கால பழக்கமானாலும் கூட, வீட்டை சுத்தமாக வைப்பதற்கும், வெளியில் இருந்து கிருமிகள் உள்ள நுழையாமல் இருக்கவும் இதனை கடைபிடிப்பது அவசியம்.

* தும்மல் அல்லது இருமல் வரும் போது வாய் மற்றும் மூக்கை மூடி கொள்ள டிஷ்யூ அல்லது கைக்குட்டை எதுவும் இல்லையென்றால் முழங்கை அல்லது கைகளின் மேல் பகுதியை வைத்து மறைத்துக் கொள்ள வேண்டும்.
இதனால் மூக்கில் இருந்து கிருமிகள் காற்றில் கலப்பது அல்லது நாம் பயன்படுத்தும் பொருட்கள் மீது கிருமிகள் பதிந்து மற்றவர்களுக்கு தொற்று ஏற்படுத்துவதை தடுக்கலாம்.
இதனால் மூக்கில் இருந்து கிருமிகள் காற்றில் கலப்பது அல்லது நாம் பயன்படுத்தும் பொருட்கள் மீது கிருமிகள் பதிந்து மற்றவர்களுக்கு தொற்று ஏற்படுத்துவதை தடுக்கலாம்.
* தற்போது அலுவலகத்திற்கு செல்பவர்கள் மற்றும் மாணவர்கள், கணனி முன் பல மணிநேரம் அமர்ந்து வேலை செய்கிறார்கள். இதனால் கண் கூசுதல், தாழ்ந்த தோரணை மற்றும் போதிய வெளிச்சமின்மை ஆகியவை கண்வலியையும், தலைவலியையும் ஏற்படுத்தும். ஆகவே தினமும் கணனி திரையை அதிக நேரம் பார்ப்பவர்கள், கண்களுக்கு போதிய இடைவேளை கொடுக்க வேண்டும். கண் வல்லுனர்கள்“20-20-20″ என்ற விதியை பரிந்துரைக்கின்றார்கள்.
* அதாவது கணனி முன் நாம் அமர்ந்திருக்கும் போது 20 நிமிடத்திற்கு ஒரு முறை திரையை விட்டு, 20 அடி தள்ளியுள்ள ஏதாவது ஒரு பொருளின் மீது ஒரு 20 நொடிக்கு பார்வையை திசை திருப்ப வேண்டும். அப்படி கண்களை மூச்சு விட வைத்தீர்களானால், அது அலுப்பு தட்டாமல் செயல்படும். இது போக, இருக்கையை விட்டு எழுந்து நின்று, கைகளை காற்றில் லேசாக ஆட விட்டு, உடலை வளைத்தால் இரத்த ஓட்டம் சீராக இருக்கும்.
* சீரான முறையில் சன் ஸ்க்ரீன் தடவி கொண்டால், அவை சருமத்தை நிறம் மாறாமல் பாதுகாப்பதோடு மட்டுமல்லாமல், வயதான தோற்றத்தையும், சரும புற்றுநோயையும் தடுக்கும். அதனால் மழையோ, வெயிலோ தினமும் காலை சன்ஸ்க்ரீன் தடவ மறந்துவிடாதீர்கள்.
* தினமும் 8 டம்ளர் தண்ணீர் குடிப்பது மிகவும் அவசியமான ஒன்றாகும். அதற்காக அதை கணக்கு செய்து கொண்டிருக்காதீர்கள். உடல் 60 சதவீதம் தண்ணீரால் தான் நிறைந்துள்ளது. இந்த நீர் செரிமானம், ஈர்த்தல், சுற்றோட்டம், எச்சில் சுரத்தல், ஊட்டச்சத்தை கொண்டு செல்தல் மற்றும் உடல் வெப்பநிலையை பராமரிப்பதற்காக செயல்படுகிறது.
போதிய நீர்ச்சத்து இருந்தால் தான், இரையக குடல்பாதையில் உணவுகள் பிரச்சனை இல்லாமல் பயணிக்கும். இது மலச்சிக்கலையும் நீக்கும். ஆனால் உடலில் போதுமான நீர் இல்லையென்றால், உடல் வறட்சியை தடுக்க பெருங்குடலானது மலத்திலிருந்து நீரை எடுத்துக் கொள்ளும். இதனால் மலச்சிக்கல் ஏற்படும்.

* வீட்டிலேயே கிருமிகள் நிறைந்த இடமாக கருதப்படுவது கழிப்பறை கோப்பையே. ஆனால் நாம் சமையலறையில் பயன்படுத்தும் ஸ்பாஞ் அதையும் மிஞ்சி விடுகிறது என்று ஆய்வுகள் கூறுகிறது. சமையலறையில் உள்ள ஸ்பாஞ்சை சிந்திய பருப்பு அல்லது குழம்புகளை துடைக்க பயன்படுத்துவோம்.
மேலும் ஈரப்பதத்தை உறிஞ்சக்கூடிய தன்மையை கொண்ட அதில் உணவு சம்பந்தமான பாக்டீரியாக்கள் அதிகமாக குடி கொள்ளும். ஆகவே இது கிருமிகள் பரவுவதை தவிர்க்க தினமும் சாயங்காலம் அதனை நீரில் அலசி மைக்ரோ-ஓவனில் 45 நொடிகளுக்கு வைத்து எடுங்கள்.

* பல் சொத்தை மற்றும் ஈறுகளில் வியாதிகளை தவிர்க்க தினமும் பல் துலக்குவது மிகவும் அவசியம். இருப்பினும், நாக்கை சுத்தம் செய்வதும் முக்கியமான ஒன்றாகும். அது வாயை சுத்தமாக வைத்திருக்கும். பல்லைச் சுற்றி ஏற்படும் நோய்கள், வாய் மண்டலத்தை மட்டுமல்லாமல், அதையும் தாண்டி பாதிப்படையச் செய்யும்.
* கோபம் தலை தூக்குகிறதா? அப்படியானால் 20 வரை எண்ணுங்கள். ஒவ்வொரு எண்ணுக்கு நடுவில் மெதுவாகவும், ஆழமாகவும் மூச்சு விடுங்கள்.
இந்த எளிய வழிமுறை கோபத்தை குறைத்து நரம்புகளை அமைதியாக்கும். மெதுவாகவும், ஆழமாகவும் மூச்சு விடுவதால், கோபமான எதிர்வுணர்விலிருந்து நரம்பியல் அமைப்பு மாறும். இதனால் அமைதி ஏற்படும்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
வாங்கோ, வாங்கோ, பின்னூட்டம் போடுங்கோ