சனி, 23 பிப்ரவரி, 2013

வலைச்சரம் 18-2-2013


பதிவின் பெயர்சாமியின் மன அலைகள்
 http://swamysmusings.blogspot.in (பழனி.கந்தசாமி)

ஓய்வு பெற்ற தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழக பேராசிரியர்(மண்வளம் மற்றும் நீர் மேலாண்மை)  திரு. பழனி.கந்தசாமிஅவர்களின் பதிவுகள் உலகம் இது. இயல்பான நகைச்சுவை ததும்ப கட்டுரைகள் எழுதி வருகிறார். 
விழிப்புணர்வுஅனுபவ மொழிகள்பதிவர்களுக்கு ஆலோசனைகள்மற்றும் தான் பணியாற்றிய துறை சார்ந்த வேளாண்மை பற்றியும்சுவைபட சொல்லியுள்ளார்
. “வயதுக்கு (60+) வந்தவர்களுக்கும் வராதவர்களுக்கும் “(http://swamysmusings.blogspot.com/2012/11/60.htmlஎன்ற பதிவில்எல்லோருக்கும் தேவையான பத்து ஆலோசனைகளை சொல்லியுள்ளார். எப்போதும் உதவும் என்பதற்காக இந்த த்தையும் தனியே எடுத்து வைத்துக் கொண்டேன்

எனக்கு ரொம்ப நாளாக ரேசன் அரிசி மட்டும் பழுப்பு நிறத்தில் மட்டமானதாக ஏன் உள்ளது என்றுசந்தேகம் இருந்ததுஇந்த சந்தேகத்தை அவரது  ரேஷன் அரிசி தயாராகும் விதம்.”  என்ற பதிவு (http://swamysmusings.blogspot.com/2012/11/blog-post_13.html)  தீர்த்து வைத்தது.

http://swamysmusings.blogspot.com/2012_05_01_archive.htm என்ற பதிவில், ஒரு தீர்க்கதரிசி போன்று,ஈமு கோழிப்பண்ணை மோசடிகள் குறித்து முதன் முதல் புள்ளி விவரங்களுடன் சொன்னவர் இவரே.

இயற்கை விவசாயம் பற்றியும் அது ஏன் இந்தியாவில் சாத்தியம் இல்லை என்பதனையும் தெளிவுபடுத்தி இருக்கிறார்.